Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

வாக்குரிமை உள்ள அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சித்திரை 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) காலை ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிக்கு தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் வருகை தந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

இதேவேளை, நடிகர் ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். அவருடன் அவரது மகளும் இயக்குநருமான சௌந்தர்யாவும் வந்து வாக்கினைப் பதிவு செய்தனர்.

வாக்களித்துவிட்டு வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

“வாக்குரிமை உள்ள வாக்காளர்கள் அனைவரும் கண்டிப்பாகத் தங்களது வாக்கினைப் பதிவு செய்ய வேண்டும்” என்று அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தமிழகம் முழுவதும் இன்று காலை முதலே பல பிரபலங்களும் பொதுமக்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

தொண்டையில் பலூன் சிக்கியதால் 6 வயது சிறுவன் உயிரிழப்பு

ஆவணி 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானில் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானம்

ஆவணி 24, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

ராகுல் காந்தி கைது: டெல்லியில் பரபரப்பு!

ஆடி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது குறித்து ஐஸ்லாந்தில் பொது வாக்கெடுப்பு

ஆவணி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube