Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

“உழைக்கும் மக்களின் உரிமைகளே நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளம்” 

வைகாசி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டின் வளர்ச்சிக்கும், தனிநபர் முன்னேற்றத்திற்கும் உழைக்கும் அனைத்து தொழிலாளர் மக்களுக்கும் இனிய மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் இ.தொ.கா பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்.

அவரது மே தின வாழ்த்து செய்தியில், இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வகிக்கும் முக்கிய பங்கினை சிறப்பித்ததோடு, தலைநகரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தமது வாழ்க்கை முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் மக்களுக்கும் தனது மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை சுதந்திரத்திற்கு பின்னரான வரலாற்றை நினைவுகூர்ந்த அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தொழிலாளர் வர்க்கத்தின் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்து வந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

அந்த அடிப்படையில், உழைக்கும் மக்களின் நலன்களும் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

மேலும், “மனிதகுல வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என கூறிய காரல் மார்க்ஸ் அவர்களின் கருத்தை மேற்கோள் காட்டிய அவர், 1886 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர்கள் முன்னெடுத்த வரலாற்றுப் போராட்டத்தை நினைவுகூர்ந்தார்.

அந்தப் போராட்டத்தின் மூலம் “8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம்” என்ற கோரிக்கை உலகளவில் முன்னிறுத்தப்பட்டதையும், தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டத்தில் பலர் உயிரிழந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். இந்த வரலாற்றுப் போராட்டத்தின் விளைவாகவே ஆண்டுதோறும் மே 1 ஆம் திகதி உலகம் முழுவதும் மே தினம் அனுசரிக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.

தொழிலாளர் உரிமைகள் மீறப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தாம் தொழிற்சங்கத் தலைவராக உறுதியான குரல் கொடுத்துள்ளதாக தெரிவித்த அவர், எதிர்காலத்திலும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தொடர்ந்து செயல்படுவேன் என்ற உறுதியையும் ஜீவன் தொண்டமான் வெளிப்படுத்தினார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தவறுதலாகக் கைமாறிய தொகையில், 51 மில்லியன் ரூபா தொடர்பில் நாமல் கடும் விமர்சனம்!

சித்திரை 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கருப்பு பவளத்தை சட்டவிரோதமாக கடத்திய நபர் கைது!

ஆனி 26, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இந்தியாவில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு !

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞன் உயிரிழப்பு!

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube