Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சாரக்கட்டணம் மீண்டும் 11% அதிகரிக்கும் – ஹர்ஷ டி சில்வா!

Ceylon Electricit | Electricity bills | Harshadi Silva | Harsha de Silva | QuickTamilNews

வைகாசி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் மீண்டும் 11 சதவீதத்தினால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக,
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (1) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்ற ஊழலால் ஏற்பட்ட 18 பில்லியன் ரூபாய் இழப்பை, மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது.

எனினும், அரசாங்கம் அதனை மறைமுக வரிகள் மூலம் மக்களிடமே வசூலிக்கத் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, இந்த மாதம் 10 ஆம் திகதியளவில் மின்சாரக் கட்டணத்தை மீண்டும் 11 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், உணவு, மருந்து மற்றும் விவசாய உபகரணங்களுக்கான வட் வரியை நீக்குவதாகக் கூறிவிட்டு, நடைமுறையில் சமூகப் பாதுகாப்பு வரியுடன் சேர்த்து சுமார் 22 வீதம் வரை வரி வசூலிக்கப்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு கொள்முதல் செயல்முறை உடனடியாக ரத்து!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொத்தமலை கெரண்டிஎல்ல பஸ் விபத்து நடந்து ஒருவருடம் நிறைவு – உயிரிழந்த உறவுகளுக்காக விசேட மத வழிபாடுகள்!

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணியில் மேலும் 11 என்புக் கூட்டுகள் மீட்பு!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் அதிகமாக பரவும் மூளை காய்ச்சல்!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube