Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

இலங்கை மின்சாரசபை ஊழியர்களுக்கு VRS நட்ட ஈடு 2 கட்டங்களாக வழங்கப்படும் – வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க!

Ceylon Electricity Board | Staffs | VRS | SriLanka | QuickTamilNews

வைகாசி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, விருப்ப ஓய்வுத் திட்டத்தின் (VRS) கீழ் விண்ணப்பித்த முன்னாள் பணியாளர்களுக்கு இரண்டு கட்டங்களாக நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

பணியாளர்களுக்கான மொத்த நஷ்டஈட்டுத் தொகையில் 50 சதவீதத்தை திறைசேரி நிதியிலிருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 50 சதவீதத் தொகை குறுகிய காலத்திற்குள் வழங்கப்படும்.

முதற்கட்ட 50 சதவீதத் தொகையை இந்த மாதம் 15-ஆம் திகதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வாரத்திற்குள் அதற்கு அனுமதி கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டு 6 புதிய நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில், இதற்கு இணங்காத சுமார் 2,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த மார்ச் 09 அன்று விருப்ப ஓய்வு பெற்றனர்.

முறையான இழப்பீட்டுத் தொகை மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படாமல் இருந்தமையால், ஊழியர் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடியிருந்தது.

தற்போது அமைச்சரவை அனுமதியுடன் இந்த மாதம் 15-ஆம் திகதிக்குள் முதற்கட்ட 50 சதவீத நஷ்டஈட்டுத் தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆகஸ்ட் 17

ஆடி 19, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதிக்கு திருக்குறளை பரிசாக வழங்கிய இந்திய பிரதமர்

புரட்டாதி 13, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

கொழும்பு போர்ட் சிட்டியில் சீனக் குழுக்களால் சீனர்கள் மூவர் கடத்தல் – சீனர் ஒருவர் உயிரிழப்பு!

ஆடி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலைகளில் திருத்தம் – வெளியானது புதிய விலை திருத்தப்பட்டியல்!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube