Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

12 நவீன கண்காணிப்பு ட்ரோன்களை இலங்கைக்கு வழங்கியது அவுஸ்திரேலியா!

Australia Government | SriLanka | 'Operation Cawarin's Borders') | Drone's | Hand Overed | QuickTamilNews

வைகாசி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் கவரிங் போர்டர்ஸ்’ (‘Operation Cawarin’s Borders’) கூட்டு முகமை பணிக்குழுவின் தளபதியும், கடல்சார் எல்லைக் கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் பிரட் சோன்டர் 12 நவீன கண்காணிப்பு ட்ரோன்களை இலங்கை கரையோர பாதுகாப்புப் படை பிரிவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளார்.

மிரிஸ்சவிலுள்ள கரையோர பாதுகாப்புப் படை தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை கரையோர பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரோஹன் ஜோசப் இந்த உபகரணங்களைப் பெற்றுக்கொண்டார்.

கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதே ட்ரோன் வழங்கப்பட்டமையின் முக்கிய நோக்கமாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படைக்கும் இலங்கை கரையோர பாதுகாப்புப் படைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை இந்த நிகழ்வு மேலும் உறுதிப்படுத்தியுள்ளதாக நம்பப்படுகின்றது.

கடல்சார் எல்லை முகாமைத்துவத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான ஒத்துழைப்பை இது பறைசாற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், எதிர்காலத்தில் இரு நாட்டு பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட வேண்டிய கூட்டு நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு திராய்மடுவில் வீடொன்றில் தீ பரவல்!

ஆனி 1, 2026
முக்கியச் செய்திகள்

உலகம் முழுவதும் இன்று சர்வதேச தந்தையர் தினம்!

ஆனி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீகொடை தானசாலை விபத்து – வாகன உரிமையாளர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்!

ஆனி 6, 2026
இலங்கைஎங்கள் ஊர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கிளிநொச்சி இளைஞனுக்கு இன்னும் தடுப்புக்காவல் உத்தரவு இல்லை – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube