இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல் 2026 தொடரில், லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய (09) ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) வீரர் உர்வில் பட்டேல் அதிவேக அரைசதமடித்து புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், உர்வில் படேல், வெறும் 13 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார்.
இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த வீரர்கள் வரிசையில் உர்வில் படேல் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
முன்னதாக 2023 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதமடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை உர்வில் பட்டேல் சமன் செய்துள்ளார்.
