Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைக்கைதிகள் போதைப்பொருள் வைத்திருக்க அனுமதித்த 2 கான்ஸ்டபிள்கள் பணி நீக்கம்!

Prison | Prisoner's | Narcotics | Constables | Srilanka | Police | QuickTamilNews

வைகாசி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களுக்குத் தடைசெய்யப்பட்ட பொருட்களை வைத்திருக்க அனுமதித்த குற்றச்சாட்டின் கீழ், மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும், இரண்டு சிறைகளில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களுக்குப் ஹெரோயின் போதைப்பொருள், சிகரெட்டுகள் மற்றும் லைட்டர்கள், புகையிலை துண்டுகள் போன்ற பொருட்களை வைத்திருக்க அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், போதைப்பொருள் பயன்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஈயத்தாள்கள் மற்றும் குழாய் வடிவில் சுருட்டப்பட்ட பணத்தாள்களையும் சிறைகளுக்குள் வைத்திருக்க இவர்கள் அனுமதி அளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

பேலியகொடை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று குறித்த சிறைக்கூண்டுகளைச் சோதனையிட்ட போதே, அங்கிருந்து இந்தத் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்தே குறித்த இரண்டு கான்ஸ்டபிள்களுக்கும் எதிராக இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய வாகனங்களுக்கு அமைச்சரவை அனுமதி!

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஒரு இலட்சம் வாகனப் பதிவுத் தகடுகள் குவிந்து கிடப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது!

வைகாசி 22, 2026
இலங்கைவிளையாட்டு

யாழ். கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது!

ஆடி 17, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறை இலாகா ஒதுக்கப்பட்டது வருத்தமளிக்கிறது- நடிகர் விஷால்

வைகாசி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube