Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத ரீதியிலான தாக்குதலில் இந்து, கிறிஸ்தவ மக்களே அதிகம் குறிவைக்கப்படுகின்றார்கள்!

வைகாசி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் கடந்த 2024 நவம்பர் – 2025 ஒக்டோபர் வரையிலான 12 மாத காலப்பகுதியில் மத அடையாளத்தின் அடிப்படையில் 89 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும், தரவுகளின் பிரகாரம் கிறிஸ்தவ மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்தவர்களே இக்காலப்பகுதியில் அதிகம் இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் 2024 நவம்பர் – 2025 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் பதிவான மத சுதந்திர மீறல்கள் தொடர்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் ‘இணைப்பாதைகளில் உரிமைகள் : இலங்கையில் இடம்பெற்ற மத ரீதியான தாக்குதல்கள் பற்றிய சட்ட ஆய்வு’ எனும் தலைப்பிலான ஆய்வறிக்கை நேற்று முன்தினம் வியாழக்கிழமை (14) வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தரவுகளின் பிரகாரம் மேற்குறிப்பிட்ட 12 மாதகாலத்தில் மத மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை மீறும் வகையிலான 29 சம்பவங்களும், 19 பிரிவினைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்தப் பிரிவினைச் சம்பவங்களில் பெரும்பாலானவை வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்யுமாறு கோரி மேற்கொள்ளப்பட்டவையாகும். அதேபோன்று அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களுடன் தொடர்புடைய 15 சம்பவங்களும், 5 பொதுச்சொத்து சேத சம்பவங்களும், உடலியல் ரீதியான வன்முறைச் சம்பவங்கள் 4 உம் பதிவாகியுள்ளன.இலங்கை செய்திகள்

அதேவேளை இக்காலப்பகுதியில் கிறிஸ்தவர்களும் இந்துக்களுமே அதிகளவில் இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும், அதன்படி கிறிஸ்தவர்களுக்கு எதிராக 58 தாக்குதல் சம்பவங்களும், இந்துக்களுக்கு எதிராக 22 தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் சமூகவலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைப் பொறுத்தமட்டில் முஸ்லிம்களே பிரதானமாக இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும், அவ்வாறான 15 சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் அறிக்கையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தலவாக்கலையிலிருந்து கொழும்பை நோக்கி நடைபயணம் மேற்கொண்ட 7 வயது சிறுவனின் நடைபயணம் பொலிசாரால் தடுப்பு!

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாத்தறை, வெல்லமடம பகுதியில் விபத்து – இருவர் பலி, 6 பேர் படுகாயம்

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செல்லப் பிராணிகள் தொடர்பில் அமைச்சரவையின் அதிரடி தீர்மானம்

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருவளை இளைஞர் ஆன்லைன் மோசடி வழக்கில் கைது!

ஆடி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube