நாட்டில், சில பகுதிகளில் இன்று 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்துடன், மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலை நாட்டின் மேற்குச் சரிவு பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு சுமார் 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலமான காற்றும் வீசக்கூடும்.
