Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொக்கட்டிச்சோலையில் கசிப்புடன் பெண் ஒருவர் கைது – இருவர் தப்பி ஓட்டம்!

வைகாசி 24, 2026
படிக்க 2 நிமிடங்கள்

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முதலைக்குடா வீடு ஒன்று மற்றும் அந்த பகுதியில் உள்ள களப்பு பகுதியில் (வாவியில்) சூட்சகமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த, உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களை நேற்று சனிக்கிழமை (23) முற்றுகையிட்ட பொலிசார் ஒரு பெண்ணை கைது செய்ததுடன் இருவர் தப்பி ஓடியதுடன் 13 இலட்சத்து 82 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா 75000 மில்லி லீற்றர் கசிப்பு பரல்கள் உட்பட உபகரணங்களை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

இந்த பகுதிகளில் உள்ள களப்புடன் உள்ள கண்ணா காடு பகுதிகளில் சூட்சுமமான முறையில் கசிப்பு உற்பத்தியை செய்து அங்கிருந்து தோணிகள் மூலமாக தாழங்குடா, மாவிலங்குத்துறை, கல்லடி, நாவற்குடா, மட்டு கருவப்பங்கேணி, போன்ற பிரதேசங்களுக்கு கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்

இந்த சட்டவிரோத செயற்பாட்டு தொடர்பாக விசேட புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவல்களை அடிப்படையாக வைத்து பொலிஸ் விசேட நடவடிக்கை ஒன்றை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அபேரத்ன தலைமையில் நேற்று(23) காலையில் இரு குழுவினர் அந்த களப்பு பகுதியை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது களப்பில் உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 இலட்சத்து 82 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா, 8 பரல்கள் மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்னும் ஒரு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டதையடுத்து உற்பத்தியில் ஈடுபட்வர்கள் தப்பி ஓடியுள்ள நிலையில் அங்கிருந்து பிளாஸ்டிக் போத்தல்கள் கொண்ட 4 உரப்பை மூடைகள், 08 ஊறல் பரல்கள் , 02 தோணிகள் என்பவற்றை மீட்டுள்ளனர்.

அதேவேளை பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முதலைக்குடா பகுதியில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்ட விரோத கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட மாவிலங்குதுறை தாழங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவரை 75000 மில்லி லீற்றர் கசிப்புடன் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மீன் பிடிக்கச் சென்ற 19 வயது இளைஞன் காணாமல் போயுள்ளார்!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிரை காவும் நுளம்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா பதவி விலகல்

சித்திரை 29, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்தத் தொகுதியில் பின்னடைவு!

வைகாசி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube