Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்லேகம ஹேமரத்ன தேரரை காப்பாற்றும் பொலிஸார் – சிறுமியின் பக்க ஆதாரங்கள் வழங்கப்படும் விசாரணையில் மெத்தன போக்கு!

வைகாசி 24, 2026
படிக்க 2 நிமிடங்கள்

அநுராதபுரம் எட்டு விகாரைகளின் தலைமை பிக்குவான பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளில், இலங்கை பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் காட்டிய பாரபட்சமான மற்றும் முறையற்ற செயற்பாடுகளை தினன தகுண கூட்டிணைவு வன்மையாக கண்டித்துள்ளது.

அக் கூட்டிணைவின் நிறைவேற்று சபையினால் நேற்று சனிக்கிழமை (23) வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த மே மாதம் 22 ஆம் திகதி அநுராதபுர நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், இந்நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படுவதில் நிலவும் அருவருக்கத்தக்க இரட்டைத் தரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள், அரசியல் ரீதியாக அதிகாரம் கொண்டவர்கள் மற்றும் மதத் தலைவர்களைப் பாதுகாப்பதற்காக நாட்டின் சட்டம் திட்டமிட்டு வளைக்கப்படுவதையும், நிர்க்கதியான நிலையில் உள்ள பாதிக்கப்பட்ட சிறுமியின் உரிமைகள் அலட்சியப்படுத்தப்படுவதையும் இது உறுதிப்படுத்துகிறது.

பாரதூரமான குற்றச்சாட்டுக்கு உள்ளான சந்தேகநபர் ஒருவருக்கு பொலிஸார் வழங்கிய விசேட பிரபுத்துவ உபசரிப்புகளை எமது கூட்டிணைவு வன்மையாக கண்டிக்கிறது.

சாதாரண சந்தேகநபர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் போது கடுமையான தடுப்பு விதிகளுக்கு உட்படுத்தப்படும் நிலையில், இந்த சந்தேகநபர் இரண்டு பொலிஸ் ஜீப் வாகனங்களின் பாதுகாப்புடன் ஆடம்பர வாகனத்தில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து வீதியை மறித்து பொலிஸார் பாதுகாப்பு வழங்கியமை, பொலிஸார் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாமல் ஒரு குறிப்பிட்ட நபரின் தனிப்பட்ட பாதுகாவலர்களாகச் செயற்பட்டமையையே காட்டுகிறது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதியே பொலிஸாரிடம் தெளிவான வாக்குமூலத்தை வழங்கியிருந்தும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அதனைத் தெரியப்படுத்தாமல் பொலிஸார் சுமார் இரண்டு வாரங்கள் மௌனம் காத்தமை, விசாரணைகளை மூடிமறைப்பதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாகும்.

சந்தேகநபரான தேரருக்கும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையிலான நெருங்கிய உறவுமுறை மற்றும் இதன் காரணமாக விசாரணையின் வெளிப்படைத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது.

சந்தேகநபர் விளக்கமறியலைத் தவிர்த்து தனியார் வைத்தியசாலையில் தங்கியிருக்க அனுமதித்தமை மற்றும் பிணை வழங்கும்போது பொலிஸார் எதிர்ப்புத் தெரிவிக்காதமை ஆகியவற்றின் பின்னணியில் இந்த உறவினர் முறையிலான தலையீடு இருந்துள்ளது.

பொலிஸாரும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் விடுத்த கோரிக்கையைப் புறக்கணித்து, சட்டமா அதிபர் திணைக்களம் ஆஜராகாமையினால், சந்தேகநபர் சார்பில் ஆஜரான சுமார் 36 சட்டத்தரணிகள் கொண்ட குழுவுக்கு முன்னால் அந்தச் சிறுமி நிர்க்கதியாக்கப்பட்டார்.

இலங்கை அரசியலமைப்பின்படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், காவியுடைக்குள்ள அதிகாரத்துக்கும் உயர் அரச பதவிகளுக்கும் முன்னுரிமை வழங்கியதன் மூலம் பொலிஸ் திணைக்களம் பாதிக்கப்பட்டவரின் அடிப்படை உரிமைகளை மோசமாக மீறியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசாங்கம் 1854.77 மில்லியன் அ.டொலர் அரசமுறை கடன்களை பெற்றுக்கொண்டுள்ளது!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாகனங்களை உருமாற்றம் செய்தல், சட்டவிரோத மாற்றங்களை செய்தல் தண்டனைக்குரிய குற்றம்!

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

FBC பரிசோதனைக்கு அதிகக் கட்டணம் வசூலித்த வைத்தியசாலைக்கு அபராதம்

ஆடி 29, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கலேவெலாவில் வனவிலங்கு பகுதிகளுடன் சந்தேக நபர் கைது!

ஆனி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube