Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஇலங்கை

அஹமதாபாத் மற்றும் கொழும்பு இடையே புதிய நேரடி விமானச் சேவைகள் ஜூன் 19 முதல்!

வைகாசி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேலும் ஊக்குவிப்பதற்கும், மேற்கு இந்தியாவுடனான வான்வழித் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கும் ஏதுவாக, இந்தியாவின் அஹமதாபாத் மற்றும் கொழும்பு ஆகிய நகரங்களுக்கு இடையே எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதி முதல் புதிய நேரடி விமானச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இலங்கையின் தனியார் விமானச் சேவை நிறுவனமான ஃபிட்ஸ்எயார் இந்த வழித்தடத்தில் வாரத்திற்கு மூன்று நாட்கள் தனது விமானச் சேவைகளை இயக்கவுள்ளது. இதன் மூலம், ஏனைய நகரங்கள் ஊடாக இதுவரை 9 மணித்தியாலங்களாகக் காணப்பட்ட பயண நேரம், இனி வெறும் 3 மணித்தியாலங்களாகக் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுற்றுலா சந்தையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதுகுறித்து சினமன் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் அமைப்பின் பிரதிநிதி கமல் முனசிங்க ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த ஆண்டில் மாத்திரம் இந்தியாவில் இருந்து சுமார் 500,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாகவும், இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் ஏனைய முக்கிய நகரங்களில் இருந்து நேரடி வான்வழித் தொடர்புகள் ஏற்கனவே காணப்பட்ட போதிலும், குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் நகரம் இதுவரை இலங்கை சுற்றுலாத்துறையால் முழுமையாகப் பயன்படுத்தப்படாத ஒரு பெரும் சந்தையாகக் காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழி: 491 என்புக்கூடுகள் அடையாளம்

ஆவணி 5, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

நேபாளத்தின் பேரிடர் மீட்புக்கு கைகொடுக்கும் இலங்கை

ஆவணி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை கடல்வழியாக வந்தடைந்த 14 லம்போகினி சொகுசு வாகனங்கள்

ஆவணி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மனிதர்களின் முகபாவனைகளில் வெளிப்படும் உணர்வுகளை நாய்களால் வேறுபடுத்தி அறிய முடியும்

ஆவணி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube