Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

தையிட்டி விகாரையைப் புகைப்படம் எடுத்த இளைஞர்களுக்கு பிணை!

வைகாசி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தையிட்டி விகாரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான, யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, ஞாயிற்று கிழமைகளில் பலாலி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திடுமாறும் நிபந்தனை விதித்துள்ளது.

வெசாக் தினத்தை முன்னிட்டு, தையிட்டி விகாரையில் நேற்றையதினம் (30) சனிக்கிழமை விசேட வழிபாடுகள் இடம்பெற்ற நிலையில், விகாரைக்கு சற்று தொலைவில், காணி உரிமையாளர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள், விகாரைக்கு செல்வதாக கூறி விகாரைக்குச் சென்று, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

இதனை அவதானித்த பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்தவேளை, இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வழங்கியதை அடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைக்குப் பின்னர் இருவரையும் மல்லாகம் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது அவர்களை ஒரு இலட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, ஞாயிற்று கிழமைகளில் பலாலி காவல்நிலையத்தில் கையெழுத்திடுமாறு நிபந்தனை விதித்தது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

எம்பிலிபிட்டிய தீவிபத்து – வைத்தியசாலையில் அனுமதிப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு !

ஆனி 3, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

அமீர்கானுக்கு 3வது திருமணமா?

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு அவசர அறிவிப்பு!

வைகாசி 22, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கூடிய விரைவில் எரிபொருள் மற்றும் உரத்தின் விலை குறைவடையும் – ட்ரம்ப்!

ஆனி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube