ஹொரணை, பட்டகொட, கல்பாத பகுதியில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன் 11 பேரை காணவில்லை 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (03) மாலை இடம்பெற்றுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டபோது, முதியோர் இல்லத்தில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரும் வெடித்ததால், தீ மேலும் பரவியுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
