Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் 6 மாதத்தில் 360 இணையவழி நிதி மோசடிச் சம்பவங்கள்!

ஆனி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 360 இணையவழி நிதி மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தற்போதைய டிஜிட்டல் தளங்களில் பயனர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக, கணினி அவசரப் பிரிவின் முதன்மை தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை பதிவாகியுள்ள இணையவழி மோசடிச் சம்பவங்களில் 14 சம்பவங்கள் சிறுவர்களுடன் தொடர்புடையவை என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், 40 வாட்ஸ்அப் கணக்குகள் ஊடுருவப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இது நாடு முழுவதும் உள்ள சமூக ஊடகப் பயனர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இணையவழித் தாக்குதல்களின் வளர்ந்து வரும் போக்கைக் காட்டுகிறது.

இதன் காரணமாக, இணையப் பயனர்கள் அனைவரும் மிகவும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு இலங்கை கணினி அவசரப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், தனிப்பட்ட விபரங்களைப் பகிர்வதற்கு முன்போ அல்லது இணையவழிப் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு முன்போ, சம்பந்தப்பட்ட இணையத்தளங்கள் மற்றும் லிங்குகளின் நம்பகத்தன்மையை முழுமையாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சமூக ஊடகக் கணக்குகளின் பாதுகாப்பை பலப்படுத்த, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் இலங்கை கணினி அவசரப் பிரிவின் முதன்மை தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல வலியுறுத்தியுள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் வருடாந்தம் 19% காய்கறிகளும், 21 % பழங்களும் வீணாக்கப்படுகின்றது!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி!

ஆனி 12, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

உங்கள் தொலைபேசி திருடப்பட்டால் கண்டிப்பாக இதை செய்யுங்கள்!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பூஜித்தவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்புக்கான திகதி நிர்ணயம்

ஆனி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube