Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேனீக்கள் அழிவு – மகரந்த சேர்க்கை பாதிப்பு!

ஆனி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கையில் தேனீக்கள் மற்றும் மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சியினங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதன் காரணமாக, உணவு உற்பத்திக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன் விவசாயிகளின் செலவும் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக விவசாய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

விவசாயத் திணைக்களத்தின் தரவுகளின்படி, தேனீக்கள் மூலமான மகரந்தச் சேர்க்கையானது பயிர் விளைச்சலை 20% முதல் 70% வரைஅதிகரிக்கக் கூடியது. எனினும், நவீன விவசாய முறைகள், வாழ்விட அழிப்பு மற்றும் மிதமிஞ்சிய இரசாயனப் பூச்சிக்கொல்லிப் பயன்பாடு ஆகியவற்றால் தேனீக்கள் தற்போது பெரும் அழிவைச் சந்தித்து வருகின்றன.

இதனால், தேனீக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத “தேனீ-தோழமை” விவசாய முறைகளை கையாளுமாறு விவசாயத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பான வேளாண்மைத் திணைக்களத்தின் விரிவாக்க இயக்குநரான பி. சிசிர குமாரவின் கூற்றுப்படி,

மகரந்தச் சேர்க்கைக்கு ஏற்படும் தீங்குகளை பொருட்படுத்தாமல், அதிக விளைச்சலை பெறும் நோக்கில் பல விவசாயிகள் அதிக நச்சுத்தன்மை கொண்ட இரசாயன பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் பயன்படுத்துகின்றனர் என்றார்.

தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், இலங்கை விவசாயிகளுக்கு ஏற்கனவே கூடுதல் பொருளாதாரச் சுமைகள் ஏற்பட்டுள்ளதுடன் இயற்கையாக மகரந்தச் சேர்க்கை செய்யும் உயிரினங்கள் குறைவடைந்துள்ளது., விவசாயிகள் கையால் மகரந்தச் சேர்க்கை செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர். இது தொழிலாளர் கூலிச் செலவுகளைக் கணிசமாக அதிகரிக்கிறித்துள்ளது என்பதை பி. சிசிர குமார சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகம் முழுவதும் விவசாயப் பயிர்களில் ஏறக்குறைய 70% முதல் 75% வரை தேனீக்களால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதாகவும், பழ மரங்களின் மகரந்தச் சேர்க்கையில் 75% முதல் 80% வரை தேனீக்களாலேயே நடைபெறுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. விளைச்சலை அதிகரிப்பது மட்டுமின்றி, தேனீக்களின் மகரந்தச் சேர்க்கையானது பழத்தின் அளவு, வடிவம், சர்க்கரை உள்ளடக்கம் மற்றும் அமிலத்தன்மை போன்ற பண்புகளை மேம்படுத்துவதன் மூலம் விளைபொருட்களின் தரத்தையும் உயர்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வீடொன்றினுள் புதையல் தோன்றிய மூவர் கைது!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

Colombo Marathon க்கு பதிவுகள் ஆரம்பம்!

ஆனி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கம்பளையில் மரம் முறிவு: போக்குவரத்து பாதிப்பு!

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மசகு எண்ணெய் ஏற்றிய இரு கப்பல்கள் 31 ஆம் திகதி நாட்டை வந்தடையும்!

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube