Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி ஆவணங்கள் தயாரித்த மூவர் கைது!

ஆனி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

போலி காணி ஆவணங்கள், போலி தேசிய அடையாள அட்டைகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் போலி உத்தியோகபூர்வ இலச்சினைகள் ஆகியவற்றை தயாரித்து மோசடிகளில் ஈடுபட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், நேற்று (05) வெள்ளிக்கிழமை பொரளை, என்.எம். பெரேரா மாவத்தையில் அமைந்துள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு நடத்திய விசேட சோதனையின் போதே இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது அந்த வீட்டிலிருந்து காணிப் பதிவகத்திற்குச் சொந்தமான இரண்டு அசல் ஆவணக் கோப்புகள், காணிப் பரிமாற்றங்கள் தொடர்பான போலி ஆவணங்கள், நான்கு போலி தேசிய அடையாள அட்டைகள் மற்றும் பல்வேறு அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான சுமார் 600 போலி உத்தியோகபூர்வ இலச்சினைகள் ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், போலி ஆவணங்களைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்னணு உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இக்குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன், 15 இலட்சம் ரூபா பணம் மற்றும் பல சொத்துக்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின் மூலம் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், இந்த மோசடி விவகாரத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேகநபர் தெல்கந்த பகுதியில் வைத்துப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 54, 55 மற்றும் 59 வயதுடைய பொரளை, திக்வெல்ல மற்றும் ஹொரணை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீண்டகாலமாக இந்த போலி ஆவணத் தயாரிப்புப் பின்னணியில் இருந்து பல கோடி ரூபா பெறுமதியான காணிகளை மோசடி செய்துள்ளனரா என்பது குறித்துக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளைில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை இன்று மீள ஆரம்பம்

ஆவணி 3, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மனிதர்களின் முகபாவனைகளில் வெளிப்படும் உணர்வுகளை நாய்களால் வேறுபடுத்தி அறிய முடியும்

ஆவணி 14, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

டொன் கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பல்லேகம ஹேமரத்தின தேரரின் விளக்கமறியல் நீட்டிப்பு!

வைகாசி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube