மட்டக்களப்பு, சின்ன ஊறணி அருள்மிகு ஸ்ரீ ஆதி பேச்சி அம்மன் ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருடாந்த சடங்கு உற்சவம் நேற்று (07) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது.
காலை 7.00 மணியளவில் ஆலயத்தின் பிரதம பூசகர் சிவஸ்ரீ ந.வே. பொன்னுத்துரை அவர்களின் தலைமையில் அம்பாளின் திருக்கதவு திறக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றது.

பிற்பகல் 4.30 மணியளவில் சின்ன ஊறணி ஸ்ரீ மாவடிப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மங்களப் பொருட்கள் மற்றும் அடையாளப் பொருட்கள் பக்திப் பூர்வமாக ஊர் வளமாகச் ஆதி பேச்சி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தது.

இவ் வருடாந்த சடங்கு உற்சவமானது தொடர்ந்து 8 நாட்கள் ஆலயத்தில் பக்திபூர்வமாக இடம்பெறவுள்ளது. இந்த உற்சவ காலங்களில் தினசரி மதியம் 1.30 மணிக்கும், அதிகாலை 4.00 மணிக்கும் விசேட பூஜைகள் மற்றும் வழிபாடுகள் இடம்பெறவுள்ளது.

இதேவேளை வருகின்ற 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு ‘பள்ளிச் சடங்கு’ நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து சத்துருக்கொண்டான் செந்தாமரை தீர்த்தக் குளத்தில் அம்பாளின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்த்தமாடும் தீர்த்தோற்சவ நிகழ்வும், விசேட பூஜைகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
