Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் வடிவேல் சுரேஷ் பேச்சுவார்த்தை!

ஆனி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் 114வது கூட்டத் தொடரின் 7வது நாளில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (9) நடைபெற்றது.

இதன்போது, உலக வங்கி இலங்கைக்கு கடந்த காலங்களில் வழங்கியுள்ள நிதி மற்றும் அபிவிருத்தி உதவிகளுக்காக வடிவேல் சுரேஷ் அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்தார்.

தொடர்ந்து, அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக பெருந்தோட்டப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய சேதங்கள் தொடர்பாக உலக வங்கி பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

குறிப்பாக, பெருந்தோட்ட மக்களின் குடியிருப்புகள் மற்றும் வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எதிர்கால உதவித் திட்டங்களை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அத்துடன், பெருந்தோட்டப் பகுதிகளில் காணப்படும் உட்கட்டமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அடிப்படை வசதிகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கான ஆதரவையும் உலக வங்கியிடம் அவர் வலியுறுத்தினார்.

பெருந்தோட்டத் துறையில் பணிபுரிபவர்களில் சுமார் 80 சதவீதம் பெண்கள் என்பதைக் குறிப்பிட்ட அவர், அவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு, தொழில் நலன், சமூகப் பாதுகாப்பு மற்றும் மாற்று வருமான வாய்ப்புகளை உருவாக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

இக்கலந்துரையாடலின் போது பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஜெர்மனி – லூஃப்தான்சா விமானத்தின் முன் சக்கரங்கள் திடீரென உடைந்து விபத்து!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்து விபத்து: 10 பேர் காயம்

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியம் உறுதி!

வைகாசி 15, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

காங்கோவிலிருந்து பிரான்ஸ் திரும்பிய மருத்துவருக்கு எபோலா தொற்று உறுதி

ஆனி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube