Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை ஆரம்ப நிகழ்வு – தமிழ்மொழியை தலைகுனிய வைத்த சம்பவம்!

ஆனி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமிழ் நாட்டில் நேற்று (9) சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை ஆரம்ப நிகழ்வு, சென்னை இராஜரத்தினம் விளையாட்டரங்கில் தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் காண்பிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலான காணொளியில் பல எழுத்துப் பிழைகள் காணப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில்

“பெண்களின் பாதுகாப்பை முன்னிறுத்தும் ஒரு முக்கிய நிகழ்வில், ஒளிபரப்பப்பட்ட காணொளியில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்துப் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளன.

தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் உள்ள இக்காலத்தில், சில நிமிட காணொளியைக் கூட பிழையின்றி தயாரிக்க முடியாதது அரசுத் துறைகளின் அலட்சியத்தையே காட்டுகிறது.

காணொளி ஒளிபரப்பப்படுவதற்கு முன்னதாக அது பரிசீலிக்கப்பட்டதா அல்லது பிழைகள் தெரிந்தும் அலட்சியமாக வெளியிடப்பட்டதா?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி உலக அரங்கில் தமிழ் மொழியின் பெருமையைப் பறைசாற்றி வரும் வேளையில், தமிழ்நாட்டிலேயே தாய்மொழியில் ஒரு காணொளியைக் கூட முறையாக உருவாக்கத் தவறியமை வருத்தத்திற்குரியது என வானதி சீனிவாசன் தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை 2026 ஆம் ஆண்டின் உலகின் முன்னணி நலன் சுற்றுலா இடமாகத் தேர்வு!

ஆனி 27, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

மைக்ரோசொப்ட் தனது உலகளாவிய ஊழியர்கள் 4,800 பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானம்!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘பொலிஸ் மா அதிபரிடம் கூறுங்கள்’ திட்டம் 2026இல் மறுசீரமைப்பு!

ஆனி 29, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

வாகன சாரதிகளே அவதானம் – விதிமீறல்களுக்கான தண்டப்பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube