Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

பாதுக்கை விகாரையில் ரூ.15 இலட்சம் திருட்டு: போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

ஆனி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பாதுக்கை மடுலுவாவ ஸ்ரீ சுதர்மாராம விகாரையின் ஒலிப்பதிவு அறைக்குள் அத்துமீறி நுழைந்து, சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான கணினிகள் மற்றும் ஒலிப்பதிவு உபகரணங்களை திருடிச் சென்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரை பாதுக்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விகாரையில் பணியாற்றும் தேரர் ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனையடுத்து மேல் மாகாண புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் பாதுக்கை, வட்டரேகை, ஜயமுத்துகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஆவார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், திருடப்பட்ட பொருட்களை மற்றொருவரிடம் விற்பனை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் திருடப்பட்ட அனைத்து ஒலிப்பதிவு உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபர் “ஐஸ்” எனப்படும் கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து குறித்த போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்கை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

“என் கணவர் குற்றமற்றவர்”– சுரேஷ் சாலேயின் மனைவி உருக்கம்!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை மனித உரிமை அறிக்கை செப். 7-இல் தாக்கல்

புரட்டாதி 4, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

கட்டார் முன்னாள் மன்னரின் இழப்பிற்கு ஜனாதிபதி இரங்கல்!

ஆடி 13, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

ஆவணி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube