Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தடையின்றி மின்சாரத்தை வழங்க உறுதி – அநுர கருணாதிலக்க

ஆனி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எதிர்வரும் நாட்களில் எல் நினோ வானிலை தாக்கத்திற்கு மத்தியிலும், நாட்டில் எந்தவித தடையுமின்றி தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க,

தற்போதைய மதிப்பீடுகளின்படி எல் நினோ நிலைமையினால் நீர்மின் உற்பத்தியில் மட்டுமே ஓரளவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சரின் கூற்றுப்படி, இந்த காலநிலை மாற்றத்தால் நீர்மின் உற்பத்தியில் சுமார் 127 மணித்தியாலங்கள் குறைவு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த பற்றாக்குறையை மாற்று வலுசக்தி மூலங்கள் (Alternative energy sources) ஊடாக ஈடுசெய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் மின்வெட்டை அமுல்படுத்தும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் அமைச்சர் திட்டவட்டமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, எல் நினோ நிலைமையினால் வலுசக்தி துறைக்கு ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்கும், எழும் சவால்களுக்குத் தேவையான தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் அடுத்த வாரம் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

டுபாய் சுத்தாவின் போதைப்பொருள் வலையமைப்பின் 7 பேர் கைது!

வைகாசி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அவசரகால நிலை நீடிப்புக்கு நாடாளுமன்றம் அனுமதி!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்க எரான் விக்ரமரத்ன தலைமையில் 9 பேர் கொண்ட இடைக்கால குழு!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை தாக்கியவர் கைது!

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube