Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சார வேலியில் சிக்கி பெண்ணொருவர் பலி!

ஆனி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அலவ்வ பகுதியில் காணி ஒன்றுக்கு அருகில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (14) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அலவ்வ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த காணியில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, காணிக்குள் சட்டவிரோதமான முறையில் மின்சாரக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண், தேங்காய் பொறுக்குவதற்காக சட்டவிரோதமான முறையில் குறித்த காணிக்குள் நுழைந்த போது, அங்கு பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி, மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், குற்றச் செயலுடன் தொடர்புடைய மனிதப்படுகொலை என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த காணியின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அலவ்வ பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரபல பாடகர் ருக்மன் அசித காலமானார்!

ஆனி 29, 2026
இலங்கை

நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது – அமைச்சர் சுசில் ரணசிங்க உறுதி!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

துப்பாக்கி இயங்காததால் துப்பச்சூட்டு முயற்சி தோல்வி

புரட்டாதி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube