Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நெல்லுக்கான விலையை உயர்த்துமாறு மட்டக்களப்பில் போராட்டம்!

ஆனி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நெல்லுக்கான விலையினை உயர்த்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி மட்டக்களப்பு நகரில் வீதிக்கு இறங்கி மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் இருந்து பேரணியாக ஆரம்பித்து மட்டக்களப்பு நகரில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை பேரணியாக வருகை தந்து, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதேச செயலாளர்களும் கையளித்தனர்.

உலர்த்தப்படாத நெல்லுக்கான நிர்ணய விலை 110 தரவும், விவசாயமே நாட்டின் முதுகெலும்பு, விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, யூரியா க்கு 15,000 நெல்லுக்கு 5000 போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரணியாக வருகை தந்த விவசாயிகள் பிரதேச செயலக பிரதான நுழைவாயிலில் நின்று தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்தி கோஷங்களை எழுப்பியவுடன், அப்பகுதிக்கு பிரதேச செயலாளர் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து, அவர்களது மகஜரையும் பெற்றுக்கொண்டார்.

தங்களது கோரிக்கைகளையும் மகஜரையும் பிரதேச செயலாளரிடம் கையளித்த மக்கள் அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றுள்ளனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மொனராகலை – ரத்துகல ஆதிவாசி கிராமத்தின் தலைவர் தானிகல மகா பண்டலாகே சுதா வன்னில அத்தோ காலமானார்.

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ்.மாநகர சபைக்கு புதிய கணக்காளர்

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தீவிரமடையும் டெங்கு பரவல் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகளை முதலாம் தரத்தில் சேர்த்துக்கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

ஆடி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube