தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழகத்தின் முதலமைச்சருமான ஜோசெப் விஜய்யின் 52 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் பஹ்ரைனில் விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு பஹ்ரைன் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம், சமூக நல உதவிகள், கழக ஒருங்கிணைப்பாளர்கள் அறிமுகம் மற்றும் கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனர் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உயர்திரு. C. ஜோசப் விஜய் அவர்களின் ஆசியோடும் மாநில பொதுச்செயலாளர் உயர்திரு. N. ஆனந்த் (ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்) அவர்களின் ஆலோசனைப்படியும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் வழிகாட்டுதலின்படியும், தமிழக வெற்றிக் கழகம் – பஹ்ரைன் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம், சமூக நல உதவிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. கழக ஒருங்கிணைப்பாளர்களாக
1. திரு.மெல்வின் மார்ஷல்
2. திரு.லக்ஷ்மணன் வேலு
3. திரு.ராஜசேகர்
4. திரு.கார்த்திக்
5. திரு. சையது
6. திருமதி.தனலெட்சுமி
7. திரு. ராகுல்
8. திரு. சதீஷ்
9. திரு. இளங்கோ
தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டு அவர்கள் செய்து வரும் சேவைகள் பாராட்டபட்டது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், அல் ஹிலால் மருத்துவமனை இணைந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரிவான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், முகாமின் தொடர்ச்சியாக அல் ஹிலால் மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்காக ஒரு மாத கால சிறப்பு மருத்துவ சலுகைகளும் அறிவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மாலை நேரத்தில் கரவலி நட்சத்திர உணவகத்தில், வீட்டு வேலை செய்து வரும் பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். மேலும், கலை நிகழ்ச்சிகள், ஆடல்-பாடல் கொண்டாடத்துடன் நிகழ்ச்சி கலை கட்டியது. இத்துடன் சிறப்பு இரவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக
திரு. பீட்டர் கென்னடி அவர்கள்,
Chief Operating Officer, King Hamad American Mission Hospital
திரு. லியோ லெஸ்லின் அவர்கள்,
Director of Information Technology, King Hamad American Mission Hospital
திரு. பாபி பாராயில் அவர்கள்,
Working President, Overseas Indian Cultural Congress
திரு.சல்மான் பாரிஸ் அவர்கள்,
Palakkad District President, Overseas Indian Cultural Congress
திரு.நசீம் கோட்டயம் அவர்கள்,
National Executive, Overseas Indian Cultural Congress
திரு.அப்துல்லா ஹசன் அவர்கள்,
Board Member, ASRY
திரு.கருத்த பாண்டி அவர்கள்,
KTCC Contracting Company
திரு. வினு அவர்கள்,
Secure Service Company
திரு.சுரேஷ் அவர்கள்,
Dhavanish Trading, Hidd & Chennai Salon, Manama ஆகியோரும் கலந்து கொண்டனர்.
காணொளி மூலம் சிறப்பித்தவர்கள்:
உயர்திரு.D.K.S பிரபு. அவர்கள்,
கனிம வள வளர்ச்சி துறை அமைச்சர்
உயர்திரு. ராமு அவர்கள்,
சட்டமன்ற உறுப்பினர்
உயர்திரு. ரமேஷ் அவர்கள்,
ஆவடி சட்ட மன்ற உறுப்பினர்

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகம் – பஹ்ரைன் மேற்கொண்டு வரும் சமூக நலப் பணிகளை பாராட்டினர். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இதுபோன்ற நலத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகம் – பஹ்ரைன்
“மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற உயரிய நோக்கத்துடன் சமூகப் பணிகளை தொடருவோம் என்ற உறுதிமொழி கொண்ட நன்றியுரையுடன் விழா நிறைவு பெற்றது.



