Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

மின்சார சேமிப்பு பேட்டரி திட்டம் விரிவு!

ஆனி 26, 2026
படிக்க 2 நிமிடங்கள்

மின்சார விநியோகத்தை நிலைத்தன்மையாக்கி நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் ஆரம்பித்த பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு திட்டத்தின் மேலும் ஏழு அமைப்புகள் நேற்று (25) மாலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

இந்த ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஏழு, பானதுறை, பெலியத்த, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, வவுனதீவு, வாலச்சேனை, மகியங்கனை ஆகிய பகுதிகளில் உள்ள மின்சார பரிமாற்ற உப நிலையங்களுக்கு அருகில் நிறுவப்பட உள்ளன.

இந்த ஏழு அமைப்புகள் மூலம் 280MW அளவிலான மின்சார ஆற்றலை சேமிக்க முடியும் என்றும், தினசரி 70MW மின்சாரத்தை தேசிய மின்சார வலையமைப்பிற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச போட்டித் திறந்த டெண்டர் மூலம் தேர்வு செய்யப்பட்ட Windforce Plc என்ற தனியார் நிறுவனம் இந்த ஏழு ஆற்றல் அமைப்புகளின் நிறுவல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், இன்னும் ஆறு இடங்களில் இதே போன்ற சேமிப்பு அமைப்புகள் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரசாங்கம் ஆரம்பித்த இந்த திட்டத்தின் கீழ் ஜூன் மாத தொடக்கத்தில் கொண்டு வரப்பட்ட எட்டு அமைப்புகள் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உப நிலையங்களுக்கு அருகில் நிறுவப்பட்டு வருகின்றன. இவை ஜூலை மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும் நிலையில், இதன் மூலம் 80MW மின்சாரம் தேசிய வலையமைப்பிற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேமிப்பு அமைப்புகளின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை எரிசக்தி அமைச்சகத்துக்குட்பட்ட NSO (National System Operator Ltd) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும்.

முந்தைய அரசுகள் மின்சார நெருக்கடியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போதும் இத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய விடயமாக குறிப்பிடப்படுகிறது.

இந்த பேட்டரி சேமிப்பு திட்டங்கள் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைத்து நிலையான மின்சாரத்தை வழங்கி, தேசிய மின்சார வலையமைப்பை நிலைப்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்தும் எனவும், இது மக்களின் வெற்றியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் நன்மைகளை எதிர்காலத்தில் நுகர்வோருக்கு வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிங்க குட்டிகளுக்கு பெயர் வைக்க உங்களுக்கும் ஒரு வாய்ப்பு!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது: அரசாங்கம் விளக்கம்

ஆனி 9, 2026
இலங்கை

“என் கணவர் குற்றமற்றவர்”– சுரேஷ் சாலேயின் மனைவி உருக்கம்!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரணை முதியோர் பராமரிப்பு இல்ல தீவிபத்து – இயக்குனர் கைது!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube