Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

வெனிசுலாவில் மீண்டும் நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

ஆனி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பின்னர் இன்று (27) மீண்டும் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவான மற்றொரு நிலநடுக்கம் வடக்கு கடலோரப் பகுதியில் ஏற்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை அந்நாடு ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டது. அந்த அனர்த்தத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 920 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், 243 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் 3,360-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தலைநகர் கராகஸ் உட்பட வடக்கு பகுதிகளில் பல கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் தற்காலிக மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், பலர் இன்னும் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக சர்வதேச மீட்புக் குழுக்களும் வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

முதன்மை நிலநடுக்கத்திற்குப் பிறகு இதுவரை 214 பிந்தைய அதிர்வுகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக, தலைநகர் கராகஸின் வடக்கே அமைந்துள்ள லா குவைரா பகுதியே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் தொடர்வதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகளும் ஊடகங்களும் எச்சரித்துள்ளன. இதேவேளை, 1,000-க்கும் மேற்பட்ட முக்கிய உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்தோரால் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

டிஜிட்டல் சேவைகள் வரி விதிக்கும் நாடுகளுக்கு 100% வரி விதிப்பேன் – டிரம்ப் எச்சரிக்கை!

ஆனி 27, 2026
உலகம்

ஈரானிய ஜனநாயக ஆர்வலர் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கு நாடு கடத்தல்!

ஆனி 13, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சமூக ஊடகங்களுக்கான புதிய விதிகளை அறிமுகம்!

வைகாசி 23, 2026
இந்தியாஉலகம்

சபரிமலை ஐயப்பன் ஆலய பகுதியில் வானூர்திகள் தாழ்வாக பறந்ததால் பரபரப்பு!

சித்திரை 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube