குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மெணிக்ஹின்ன கணதேவி விகாரை அருகில், நேற்று (30) இரவு 8 மணியளவில் வளர்ப்பு யானை ஒன்று தாக்கியதில் 61 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யானை உரிமையாளரின் சித்தப்பாவான இவர், யானைக்கு உணவு வழங்க முயன்றபோதே தாக்குதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
