Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

களுத்துறையில் பேருந்து–முச்சக்கரவண்டி மோதல்: இருவர் பலி!

ஆடி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

களுத்துறை, கட்டுக்குருந்தை பகுதியில் காலி–கொழும்பு பிரதான வீதியில் தனியார் பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், முச்சக்கரவண்டியில் பயணித்த 62 வயதுடைய பெண்ணும் 12 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (01) நள்ளிரவு 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் இருந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, களுத்துறை கட்டுக்குருந்தை பிரதான பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட பின்னர் மீண்டும் பயணத்தைத் தொடங்கியபோது, எதிரே வந்த முச்சக்கரவண்டி திடீரென பேருந்தின் முன்பகுதியில் மோதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முச்சக்கரவண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்திருந்தனர். படுகாயமடைந்த 62 வயதுடைய பாட்டியும் 12 வயது பேரனும் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

முச்சக்கரவண்டியை உயிரிழந்த சிறுவனின் தாத்தா செலுத்தியிருந்ததாகவும், அவரும் பலத்த காயங்களுடன் களுத்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், மற்றொரு பெண் லேசான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் களுத்துறை துவே பன்சல வீதி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், பேருவளை பகுதியில் நடைபெற்ற பொசோன் சிறி நிகழ்வைக் கண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

6 மாதங்களில் ரூ.1,373.7 பில்லியன் வருமானம்: இலக்கை விஞ்சிய இலங்கை சுங்கம்!

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையில் திருத்தம் வேண்டாம் என கோரிக்கை!

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பி சிவப்பு எச்சரிக்கை!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஸ்கெலியா பிரதேச பாடசாலை மாணவர்களின் நலனுக்காக புதிய பேருந்து சேவை ஆரம்பம்.

ஆனி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube