Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

வணிகம் மற்றும் மனித உரிமைகள் மீதான தேசிய வழிகாட்டல்கள், பரிந்துரைகள் வெளியீடு – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை!

ஆடி 4, 2026
படிக்க 2 நிமிடங்கள்

பொறுப்பான வணிக நடத்தையை ஊக்குவிப்பதையும், பெருநிறுவனக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் மனித உரிமை கோட்பாடுகளை ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, வணிகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான தேசிய வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) முதன்முறையாக வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இந்த முயற்சி ஆணைக்குழுவின் வணிகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான துணைக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டதாகவும், ஆரம்பக் கோவை அதன் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பிரிவினால் தயாரிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டல்கள் மூலம், நிறுவனங்கள் மனித உரிமை மதிப்புகளை தங்கள் வணிக முடிவுகள் மற்றும் நிர்வாக நடைமுறைகளில் இணைப்பதை ஊக்குவிக்கப்படுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் வணிகம் மற்றும் மனித உரிமைகள் மீதான வழிகாட்டல் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள  இந்த வழிகாட்டல்கள், வணிகங்கள் மனித உரிமைகளுக்கு  மதிப்பதற்கும், வணிக நடவடிக்கைகளால் ஏற்படும் மோசமான தாக்கங்களைத் தடுப்பதற்கும், அவற்றுக்குத் தீர்வுகாண்பதற்குமான ஒரு நடைமுறைச் சட்டகத்தை வழங்குகின்றன.

இதற்கான தொழில்நுட்ப உதவியானது சர்வதேச அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான மெக்ஸ் பிளாங்க் அறக்கட்டளை மற்றும் வளமான எதிர்காலத்துக்கான நிலையம் ஆகியவற்றால் நடைமுறைப்படுத்தப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடனான நடைமுறைப்படுத்தப்படும் “இலங்கை மற்றும் மாலைதீவில் வணிகம் மற்றும் மனித உரிமைகளை அங்கீகரிப்பதை ஊக்குவித்தல்” என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

தனியார் துறை உள்ளிட்ட பங்குதாரர்களுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைகளைத் தொடர்ந்து, இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்படுவதற்கு முன்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வணிகம் மற்றும் மனித உரிமைகள் துணைக்குழு மற்றும் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் துணைக்குழு ஆகியவற்றினால் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த அறிமுக நிகழ்வில் உரையாற்றிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய, இந்த வழிகாட்டல்கள் முதலீட்டையோ அல்லது பொருளாதார வளர்ச்சியையோ தடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை  அல்ல. மாறாக வலுவான சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுமை தரநிலைகளுக்கு மநிப்பளிக்கும்  முதலீட்டாளர்களைக் கவரக்கூடிய, பொறுப்புமிக்க மற்றும் நிலையான வணிகச் சூழலைக் கட்டியெழுப்புவதற்காகவே  உருவாக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காத்தான்குடியில் திடீர் சோதனை: உணவகங்கள் சிக்கின

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கும் இலங்கை அரசாங்கமும்!!!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பலாங்கொடையில் காணாமல்போன 3 மாணவிகள் திருகோணமலையில் மீட்பு

புரட்டாதி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணையவழியில் மாத்திரம் பெற்றுக்கொள்ளமுடியும்

ஆனி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube