Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

6 யானைத் தந்தங்கள் 13 தந்தச் சிலைகள் வைத்திருப்பதாக நடிகர் மோகன்லால்அறிவிப்பு!

ஆடி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வனவிலங்கு பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கை எதிர்கொண்டுள்ள நடிகர் மோகன்லால், தன்னிடம் மேலும் ஆறு யானைத் தந்தங்கள் மற்றும் 13 தந்தச் சிலைகள் இருப்பதாகக் கேரள வனத்துறையிடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், தனிநபர்கள் தங்கள் வசம் உள்ள வனவிலங்கு பொருட்களின் விவரங்களை முன்வந்து அறிவிப்பதற்காகக் கேரள வனத்துறை சார்பில் பொதுமன்னிப்புத் திட்டமொன்று அறிவிக்கப்பட்டது.

முன்னதாக தன்னிடம் 4 யானைத் தந்தங்கள் இருப்பதாக மோகன்லால் அறிவித்திருந்த நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது மேலும் பல பொருட்கள் தன்னிடம் உள்ளதாக வனத்துறை அதிகாரிகளிடம் அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

வனத்துறை அதிகாரிகளின் தகவல்படி, நடிகர் மோகன்லால் புதிதாக அறிவித்துள்ள பொருட்களின் 6 யானைத் தந்தங்கள், 13தந்தச் சிலைகள், கிருஷ்ணர், ராமர் மற்றும் திருப்பதி பாலாஜி ஆகிய கடவுளர்களின் உருவச்சிலைகள் என்பன காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகர் மோகன்லாலின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தங்கள் மற்றும் தந்தத்திலான சிலைகள் மீட்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, முறையான அனுமதியின்றி இரண்டு ஜோடி (நான்கு) யானைத் தந்தங்களை வைத்திருந்ததாக அவர் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பெண் வைத்தியர் மரணம்: தேடப்படும் நபர் தலைமறைவு

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் 3 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை

புரட்டாதி 16, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஆபாச செயலிகளை நீக்க உத்தரவு!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸ் திணைக்களத்தின் பெயரை பயன்படுத்தி இணையவழி மோசடி

ஆவணி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube