Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுழைவாயிலினூடாக துப்பாக்கி பிரயோகம் நடத்தியது தவறில்லை – பிரசாத் ஹேமந்த குமார

ஆடி 8, 2026
படிக்க 2 நிமிடங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் மோதலில் ஈடுபட்ட கைதிகள், பிரதான நுழைவாயிலையும் உடைத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்ற போதே அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நுழைவாயிலின் ஊடாக துப்பாக்கிச் சூடு நடத்தும் காணொளித் தொகுப்பு குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சிறைச்சாலைகளின் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளின்படி இரண்டு பிரதான நுழைவாயில்கள் காணப்படுகின்றன. முதலாவதாக இரும்பினாலான நுழைவாயிலும், இரண்டாவதாக பலகையினாலான நுழைவாயிலும் அமைந்துள்ளன.

இந்த இரண்டு நுழைவாயில்களுக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே உடற்பரிசோதனை மற்றும் பொதிகள் பரிசோதனைக்கான ஸ்கேனிங் இயந்திரங்கள் மற்றும் தொடர்பாடல் வலையமைப்புகள் உள்ளிட்ட பல பெறுமதிமிக்க உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தின் போது, கைதிகள் முதலாவது இரும்பு நுழைவாயிலை முழுமையாக உடைத்துக் கொண்டு, அடுத்ததாக உள்ள பலகையினாலான நுழைவாயிலை நோக்கி வந்துள்ளனர்.

அந்த பலகை நுழைவாயிலையும் உடைத்துக்கொண்டு அவர்கள் வெளியில் தப்பியிருந்தால், சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய விபரீதங்களையும் அழிவுகளையும் இந்தத் தருணத்தில் மதிப்பிடவே முடியாது.

அதிகாரிகள் தங்களது உயிரைப் பணையம் வைத்து அந்த நேரத்தில் அவ்வாறு செயற்படாமல் இருந்திருந்தால், இதைவிடப் பாரிய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும்.

சமூக ஊடகங்களில் பரவும் காணொளியில், அதிகாரி ஒருவர் பலகையினாலான நுழைவாயிலில் உள்ள சிறிய துவாரத்தின் ஊடாக துப்பாக்கிச் சூடு நடத்துவது மட்டுமே வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரிகிறது.

ஆனால், அதற்குள் இரும்பு நுழைவாயிலை உடைத்துக் கொண்டு கைதிகள் பலகையினாலான நுழைவாயில் வரை வந்துவிட்டனர் என்பதே உண்மை நிலையாகும்.

மேலும், அந்த தருணத்தில் கலவரத்தைத் தணிப்பதற்காக உள்ளே சென்ற எமது சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கைதிகளுக்கு இடையே சிக்கியிருந்ததோடு, அவர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

எனவே, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே அதிகாரிகள் அந்தப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியேற்பட்டது” என பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மொனராகலை – ரத்துகல ஆதிவாசி கிராமத்தின் தலைவர் தானிகல மகா பண்டலாகே சுதா வன்னில அத்தோ காலமானார்.

வைகாசி 7, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்துக்கு 190 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய பொலிவுடன் நாரஹேன்பிட்ட புகையிரத நிலையம்!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் நீராடச் சென்று காணாமல் போன 3 சிறுவர்களில் இருவர் சடலமாக மீட்பு!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube