நுவரெலியா பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் பின்புற நிறுத்துமிடத்தில் இன்று (08) பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பயணிகளை இறக்கிவிட்டு, நிறுத்துமிடத்தை நோக்கி பின்நோக்கி செலுத்தப்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
