Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி எசல பெரஹெர ஒகஸ்ட் -13 இல் ஆரம்பம்

#KandyEsalaPerahera #EsalaPerahera #Kandy #SriLanka #BuddhistFestival #CulturalHeritage #Tradition #SriLankaTourism #VisitSriLanka #Festival #Culture #Heritage

ஆடி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெர நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

பெரஹெர நடைபெறும் திகதிகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக, இன்று (08) பிற்பகல் தலதா மாளிகை வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய, ஒகஸ்ட் 13 முதல் 17 வரையில் நாத, விஷ்ணு, பத்தினி மற்றும் கதிர்காமம் ஆகிய நான்கு மகா தேவாலயங்களில் உட்புற பெரஹெர நிகழ்வுகள் நடைபெறும் என குறிப்பிட்டார்.

ஒகஸ்ட் 18 முதல் 22 வரையில் முதலாவது ‘கும்பல்’ பெரஹெர நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

ஒகஸ்ட் 23 ஆம் திகதி முதலாவது ‘ரந்தோலி’ பெரஹெர ஆரம்பமாகவுள்ளது.

ஆகஸ்ட் 27 ஆம் திகதி இறுதி மகா ‘ரந்தோலி’ பெரஹெர நடைபெறும்.

ஆகஸ்ட் 28 ஆம் திகதி நீர் வெட்டுதல் மற்றும் பகல் பெரஹெர இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து, அதே நாள் பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து, பெரஹெர நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை உறுதிப்படுத்தும் ‘பெரஹெர விஞ்ஞாபனம்’ தியவடன நிலமேயினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் நாரம்பனாவே ஸ்ரீ ஆனந்த தேரர், மல்வத்து பீடத்தின் பிரதி செயலாளர் மஹவெல ரத்தனபால தேரர், நான்கு மகா தேவாலயங்களின் பஸ்நாயக்க நிலமேக்கள், மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் மாசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.b

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரித்துவரும் டெங்குநோயாளர்களின் எண்ணிக்கை!

ஆடி 22, 2026
இலங்கை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 7ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று!

சித்திரை 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கால்களை மடித்து உட்கார்ந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட என்புக்கூடு!

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube