கித்துல்கலையில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் உடல் பாகங்களை சட்டவிரோதமாக வைத்திருந்தும் விற்பனை செய்தும் வந்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட நகைக்கடை உரிமையாளருக்கு ரூ.21 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
38 குற்றச்சாட்டுகளின் கீழ் ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அபராதத் தொகையை மூன்று மாதங்களுக்குள் மூன்று தவணைகளில் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், முதல் தவணை ஆகஸ்ட் 5ஆம் திகதிக்குள் செலுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
