பொதுநல விடயங்களில் இணைந்து செயல்பட ஆறு தமிழ் மொழி பேசும் அரசியல் கட்சிகள் இன்று (திங்கட்கிழமை) ஊடக சந்திப்பில் ஒப்பந்தத்தை அறிவிக்கவுள்ளன.
இந்தக் கூட்டணியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை தமிழ் அரசுக் கட்சி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தற்போதைய சூழ்நிலையில் பொதுவான விடயங்களில் இணைந்து செயல்படுவதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், அதன் மேலதிக விவரங்கள் ஊடக சந்திப்பில் வெளியிடப்படவுள்ளதாகவும் கட்சிகள் தெரிவித்துள்ளன.
