Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்கள் அற்ற தலைமுறை’ – இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

ஆடி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னர் பிறந்த எவருக்கும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதைத் தடை செய்யும் ‘புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்கள் அற்ற தலைமுறை’ (Tobacco-Free Generation) கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் விசேட கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

புகையிலை சார்ந்த உற்பத்திகள் உலகில் மிகவும் அழிவுகரமான பொருட்கள் என்றும், அதிலிருந்து இளம் தலைமுறையினரை பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றும் மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் வருடாந்தம் சுமார் 20,000 பேர் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் பாவனையினால் உயிரிழப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் பாவனையினால் 2019-ஆம் ஆண்டில் மாத்திரம் 214 பில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதி உடனடியாகக் கவனம் செலுத்தி, அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை கடல்வழியாக வந்தடைந்த 14 லம்போகினி சொகுசு வாகனங்கள்

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கேகாலையில் 330 மீ.மீக்கும் அதிக மழை வீழ்ச்சி!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலை விடுமுறை குறித்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது

புரட்டாதி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்தியப் பெருங்கடல் துறைமுகங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி மீதான அமெரிக்காவின் பார்வை!

ஆனி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube