Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!

ஆடி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தமிழ் திரையுலக பாடலாசிரியரும் எழுத்தாளருமான கவிஞர் வைரமுத்துவுக்கு இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீட விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று (13) நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் கரன்சிங் இந்த விருதை அவருக்கு வழங்கி சிறப்பித்தார்.

இந்த விருதைப்பெறும் 60 ஆவது இலக்கியவாதி வைரமுத்து ஆவார். தனது பிறந்த நாளன்று இந்த உயரிய தேசிய விருதை அவர் பெற்றுள்ளார்.

24 ஆண்டுகளுக்கு பிறகு இந்த விருதை பெறும் மூன்றாவது தமிழ் இலக்கிய ஆளுமை இவர் ஆவார். இதற்கு முன்னர் மறைந்த எழுத்தாளர்களான அகிலன் மற்றும் ஜெயகாந்தன் ஆகியோர் இந்த விருதை பெற்றுக் கொண்டுள்ளனர்.

கவிஞர் வைரமுத்து ஏற்கனவே ஏழு முறை சிறந்த திரையிசை பாடல் ஆசிரியருக்கான தேசிய விருது, சாகித்திய அகடமி விருது, பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1964 முதல் வருடம் தோறும் இந்திய மொழி எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதுடன் 11 லட்சம் ரூபாய் பரிசு தொகையும், சரஸ்வதியின் வெண்கல சிலை மற்றும் இந்திய குடியரசு தலைவர் வழங்கும் பாராட்டு சான்றிதழ் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இந்தியாவின் ‘INS UDAYGIRI’ போர்க்கப்பல் இலங்கையை வந்தடைந்தது!

புரட்டாதி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் முதல் Rotary Car Parking System – இப்போது அறிமுகம்!

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவிலங்கு பாகங்களை விற்ற வியாபாரிக்கு ரூ.21 இலட்சம் அபராதம்!

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் வருடாந்தம் 19% காய்கறிகளும், 21 % பழங்களும் வீணாக்கப்படுகின்றது!

சித்திரை 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube