இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 71,235 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை டெங்கு காரணமாக 49 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேல் மாகாணத்தில் அதிகளவிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு 37,490 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் அதிக நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் 175 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக ஆபத்தான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
