Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

ஆடி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அண்மைய புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன்படி, பிரென்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 85.28 அமெரிக்க டொலராகவும், WTI ரக கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 80.14 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தம் முறிவடைந்து, கடந்த வாரம் மீண்டும் மோதல்கள் ஆரம்பமானதைத் தொடர்ந்து உலக எண்ணெய் சந்தையில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) போக்குவரத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இடம்பெறும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள தாக்குதல்கள் காரணமாக விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக கடந்த செவ்வாய்க்கிழமையும் உலக எண்ணெய் விலை சுமார் 2 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

14 மாவட்டங்களுக்கு டெங்கு நோய் எச்சரிக்கை!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகாநாயக்க தேரர்கள் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் அனைவரும் கட்டுப்படவேண்டும் – மஹிந்த ராஜபக்ஷ,

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி செயலாளருக்கும் Buddhist Tzu Chi Merit அமைப்பிற்கு இடையே கலந்துரையாடல்

ஆனி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய இராணுவத் தளபதி பிரதமரை சந்தித்தார்!

ஆவணி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube