Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொழுதுபோக்கு வரி குறைப்பு!

ஆடி 16, 2026
படிக்க 2 நிமிடங்கள்

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பொழுதுபோக்கு, கலாசாரம் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை எளிதாக அணுகுவதற்கு ஏதுவாக, பொழுதுபோக்கு வரிகளை கொழும்பு மாநகர சபை குறைத்துள்ளதுடன், இதற்கான புதிய வர்த்தமானி அறிவித்தலையும் வெளியிட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட இந்த புதிய வரி திருத்தங்கள், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.

இன்று (16) கொழும்பு மாநகர சபையில் நடைபெற்ற கூட்டத்தின்போதே கொழும்பு மாநகர சபை மேயர் விராய் கெய்லி பல்தசார் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் பதவியேற்றபோது, கொழும்பு மக்களுக்கு பொழுதுபோக்கு, கலாசாரம் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ரசிப்பதற்கு கூடுதல் வாய்ப்புகளை உருவாக்குமாறு ஆளுநர் எங்களைக் கேட்டுக்கொண்டார்.

அதனை மனதில் வைத்து, மக்களுக்கு அதனை எவ்வாறு எளிதாக்கலாம் என்று ஒரு சபையாக ஆராய்ந்து, வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் பொழுதுபோக்கு வரியை 5 சதவீதத்தால் குறைப்பதற்கு அனுமதி வழங்கினோம். தற்போது அந்த முன்மொழிவு நிறைவேற்றப்பட்டு வர்த்தமானியும் வெளியாகியுள்ளது.

இந்த புதிய வரி விகிதங்கள் அனைத்து பொழுதுபோக்கு வரி பிரிவுகளுக்கும் பொருந்தும். பொதுமக்கள் இந்த நிகழ்வுகளை தடையின்றி இரசிப்பதற்கும், இலங்கையின் படைப்பாற்றல் துறைக்கு பக்கபலமாக இருப்பதற்குமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, உள்ளூர் இசை நிகழ்ச்சிகளுக்காக இதுவரை விதிக்கப்பட்டிருந்த 12 சதவீத பொழுதுபோக்கு வரியை 7 சதவீதமாகக் குறைத்துள்ளோம். இந்த வரிக்குறைப்பின் மூலம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு சலுகை கிடைக்கிறது.

எனவே, அந்த சலுகையைக் கருத்திற்கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்களது நுழைவுச்சீட்டு விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் நிகழ்வுகளை அதிகளவிலான மக்கள் பங்குபெறுவதற்கு ஏற்ப மலிவாக்க முடியும்.

கலைத்துறை வளர்ச்சியடைவதுடன், சாதாரண பொதுமக்கள் தங்களுக்கு மலிவான விலையில் தரமான பொழுதுபோக்கு அம்சங்களை அனுபவிக்க வேண்டும் என்பதே எமது முதன்மையான எதிர்பார்ப்பாகும்.

ஒரு நகரம் என்பது வெறும் சாலைகளினாலும் கட்டடங்களினாலும் மட்டும் உருவாக்கப்படுவதில்லை. இசை, நாடகம், விளையாட்டு மற்றும் மக்களை ஒன்றிணைக்கும் கூட்டுப் பகிர்வுகளின் மூலமுமே அது கட்டமைக்கப்படுகிறது.

கொழும்பு நகரம், மக்கள் இந்த அனைத்து அம்சங்களையும் இன்னும் அதிகமாக இரசிக்கக்கூடிய ஒரு இடமாக மாறுவதற்கு இந்த நடவடிக்கை ஒரு ஆரம்பப்படியாக அமையும் என மேயர் விராய் கெய்லி பல்தசார் மேலும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானின் முன்னாள் உச்ச தலைவரின் இறுதிச்சடங்கு!

ஆனி 3, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

உர்வில் பட்டேல் அதிவேக அரைசதமடித்து புதிய வரலாற்றுச் சாதனை!

வைகாசி 10, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

விக்ரம் பிரபு – சித்தார்த் புதிய படம் தொடக்கம்

ஆனி 24, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா–ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ஆனி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube