Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசை விமர்சிப்போர் அச்சுறுத்தப்படுகின்றனர் – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு!

ஆடி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாகவும், சிலர் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

கேகாலை, தெடிகம பகுதியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் உரையாற்றிய அவர், அரசுக்கு எதிராக கருத்து வெளியிட்டவர்களிடம் விசாரணைகளின் போது அழுத்தம் செலுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

சமீப காலங்களில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், அரசை விமர்சித்த சிலர் உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், விசாரணைகளின் போது மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய நாமல் ராஜபக்ஷ, அரசாங்கம் விமர்சகர்களை அச்சுறுத்தும் போக்கில் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், அரசின் பொருளாதாரக் கொள்கைகள், வரி நடவடிக்கைகள், அரச ஊழியர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் அவர் விமர்சித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

புத்தூரில் தமிழ் இராணுவ சிப்பாய்க்கு ரூ.15 இலட்சத்தில் புதிய வீடு

ஆனி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வசிப்பதற்கு காணி இன்றி நிர்க்கதியாக நிற்கும் குடும்பங்கள்

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 302 என்புகூடுகள் அகழ்வு!

ஆனி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

களுத்துறை – வெட்டுமகடை பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube