கதிர்காமம் ருஹுணு மகா கதிர்காம ஆலயத்தின் வருடாந்த எசல திருவிழா மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் பயணத்தை எளிதாக்கும் வகையில் இலங்கை பொலிஸின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜூலை 15 முதல் 30ஆம் திகதி வரை நடைபெறும் திருவிழா காலத்தில், நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கதிர்காமத்திற்கு வருகை தரவுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலைக் குறைத்து வாகன தரிப்பிடங்களை எளிதில் கண்டறிவதே இந்த சேவையின் நோக்கமாகும்.
http://www.perahera.police.lk என்ற இணையதளத்தின் மூலம், காலியாக உள்ள வாகன தரிப்பிடங்கள் தொடர்பான தகவல்களை நேரடியாக அறிந்துகொள்ளலாம். அத்துடன், Google Maps வழியாக அருகிலுள்ள தரிப்பிடத்திற்கான வழிகாட்டி, குறைந்த போக்குவரத்து நெரிசலுள்ள பாதைகள் மற்றும் அவசர சேவை மையங்களின் இருப்பிடங்களும் வழங்கப்பட்டுள்ளன.
கதிர்காம ஆலய திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி தங்களது பயணத்தை திட்டமிட்டு, சிரமமின்றி தரிப்பிட வசதிகளைப் பெற முடியும் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
