Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

வடக்கு மீனவர்களுக்கு கடல் அட்டை வளர்ப்பு திட்டம்!

ஆடி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வடக்கு மாகாண மீனவ சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஒரு ஏக்கர் பரப்பளவில் கடல் அட்டை (Sea Cucumber) வளர்ப்பு திட்டத்தை மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு ஆரம்பித்துள்ளது.

தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) ஏற்பாடு செய்த நிகழ்வில், 120 பயனாளிகளுக்கான பரிந்துரை கடிதங்கள் வழங்கப்பட்டன.

கைட்ஸ் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதன்படி, தலா 6 உறுப்பினர்களைக் கொண்ட 20 உற்பத்தியாளர் குழுக்களுக்கு ஆரம்ப கட்ட இட அனுமதிக்கான பரிந்துரை கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அவர்கள் கட்டாய நீரியல் முகாமைத்துவ அனுமதிப்பத்திரத்தைப் பெற்று வர்த்தக ரீதியான கடல் அட்டை வளர்ப்பை முன்னெடுக்க முடியும்.

கடல் அட்டை வளர்ப்பு கடலோர சமூகங்களுக்கு நிலையான மற்றும் அதிக பெறுமதியான வாழ்வாதாரமாக அமையும் என தெரிவித்த அமைச்சர், இது இலங்கையின் நீலப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கவும் உதவும் என குறிப்பிட்டார்.

மேலும், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நாடு முழுவதும் சமூக அடிப்படையிலான நீர்வாழ் உயிரின வளர்ப்பு திட்டங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தேநீர் மற்றும் பால் தேநீரின் விலை குறைப்பு

புரட்டாதி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயணிகள் ட்ரோன் சேவை – பரிசோதனை நடவடிக்கை அடுத்த மாதம்

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ராஜித சேனாரத்ன மற்றும் உபாலி லியனகே ஆகியோருக்கான விசாரணைகள் நிறைவு!

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

புரட்டாதி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube