கல்கிஸ்ஸை, டெம்ப்பள் வீதியில் நேற்றிரவு(21) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சி, துப்பாக்கிப் பழுது காரணமாக முறியடிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு(21) டெம்ப்ளர்ஸ் வீதியில் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற துப்பாக்கித்தாரி, அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்.
எனினும், அவர் பயன்படுத்திய துப்பாக்கியில் ஏற்பட்ட பழுது காரணமாக துப்பாக்கிச்சூடு முறியடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
