Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஉலகம்

“இலங்கை என் இரண்டாவது தாய்நாடு” – சீனத் தூதுவர்!

ஆடி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கைக்கான சீனத் தூதுவராகப் பணியாற்றி வரும் கீ சென்ஹொங், தனது பதவிக்காலம் நிறைவடைந்து பிரியாவிடை பெறும் முன்னர் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.

இதன்போது, “சீனா இலங்கையின் நம்பிக்கைக்குரிய நட்புநாடு. எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா தயாராக உள்ளது. இலங்கை மக்களின் அன்பை மறக்க முடியாது. இலங்கை எப்போதும் எனது இரண்டாவது தாய்நாடு” என தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.

சந்திப்பின்போது, இலங்கை–சீனா இருதரப்பு உறவுகள், அபிவிருத்தி ஒத்துழைப்பு, போக்குவரத்துத் துறை மற்றும் மின்சார வாகனத் துறையில் எதிர்கால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

சீனத் தூதுவர் இலங்கையில் ஆற்றிய சேவையைப் பாராட்டிய சபாநாயகர், இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்த அவர் வழங்கிய பங்களிப்புக்கு நன்றியும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

பொதுச் சுகாதார பரிசோதகர் போல நடித்து கடைகளில் பணம் கோரிய குழு தொடர்பில் புகார்!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொண்டர் அடிப்படையில் கடமையாற்றி வரும் சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வீடுகளை வழங்குகின்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுமி ஒருவரை அட்டமஸ்தானாதிபதி பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் தாயும் கைது!

வைகாசி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube