Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

நிலவில் 250 நில அதிர்வுகள் பதிவு – இஸ்ரோ அறிவிப்பு

ஆடி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நிலவு என்பது முற்றிலும் அமைதியானதொரு துணைக்கோள் என்ற பொதுவான நம்பிக்கை நிலவி வரும் நிலையில், அதற்கு மாறாக அங்கு தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் அனுப்பப்பட்டு, நிலவின் தென் துருவப் பகுதியான ‘சிவசக்தி’ களத்தில் தரை இறங்கிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை மேற்கொண்ட ஆய்வுகளிலேயே இந்த புதிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

குறித்த ஆய்வின் படி, நிலவின் சிவசக்தி பகுதியில் சுமார் 250க்கும் அதிகமான முறை நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அதிர்வுகள் பெரும்பாலும் சிறிய அளவிலானவை என்றபோதிலும், சில அதிர்வுகள் பல மணிநேரம் நீடித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

நிலவின் மேற்பரப்பிலிருந்து 10 சென்டிமீற்றர் ஆழம் வரை உள்ள மண் பகுதியானது வெப்பத்தைக் கடத்தாத கவசமாகத் தொழிற்படுவதை சந்திரயான்-3 உறுதி செய்துள்ளது.

அத்துடன் அங்குள்ள மண் அமைப்பில் மெக்னீசியம் தாதுக்கள் அதிகளவில் காணப்படுவதாகவும், நிலவு உருவான காலகட்டத்தில் மெக்னீசியம் ஒரு திரவ பிளாஸ்மாவாக செயற்பட்டிருக்கலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

நிலவின் தென் துருவப் பகுதியில் பதிவு செய்யப்பட்ட இந்த அதிர்வுகள் மற்றும் மண் கட்டமைப்பு தொடர்பான தரவுகள், நிலவின் தோற்றம் மற்றும் அதன் உள்வடிவமைப்பு குறித்த மேலதிக ஆய்வுகளுக்குப் பெருமளவில் உதவும் என விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

தமிழ் உட்பட 35 மொழிகளில் ஒலித்த அரபா பேருரை!

வைகாசி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்தோனேஷியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இனம் தெரியாதவர்களால் கொலை மிரட்டல் – இராஜாங்கனை சத்தாரதன தேரர்!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாயச்சித்திரக் கண்காட்சி – கனேடிய உயர் ஸ்தானிகர் மார்டின் இசபெல்லா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்!

வைகாசி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube