இலங்கையின் கலாசார அடையாளத்தை வளப்படுத்திய மூத்த பாடகி கலாநிதி சுஜாதா அத்தநாயக்கவின் கலைப் பங்களிப்பை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராட்டியுள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் குமாரதுங்க முனிதாச கலையகத்தில் ஜூலை 28ஆம் திகதி நடைபெற்ற “கலாநிதி சுஜாதா அத்தநாயக்க பிரணாம” சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒரு நாட்டின் கலாசார நினைவுகள் வரலாற்றுப் புத்தகங்களால் மட்டுமல்லாது, மக்களின் இதயங்களில் வாழும் கலைப் படைப்புகள், குரல்கள் மற்றும் நினைவுகளாலும் உருவாகின்றன என பிரதமர் குறிப்பிட்டார்.
கலாநிதி சுஜாதா அத்தநாயக்க தனது கலை மற்றும் மனிதநேயத்தின் மூலம் மக்களை ஒன்றிணைக்கும் கலாசாரத்தின் சக்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
