பலஸ்தீனில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் எரிபொருள் தட்டுப்பாடு கடுமையான நிலையை எட்டியுள்ளதுடன், நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.
இந்த பிரச்சினை பாலஸ்தீன மக்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.
சோதனைச் சாவடிகளில் இஸ்லாமியப் படைகள் பாலஸ்தீனர்களை மணிக்கணக்கில் தடுத்து நிறுத்துகின்றன.
இதனால் அதிகளவான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலேயே மக்களுக்கு எரிபொருள் அவசியமாகிறது.
பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்களுக்கு மேலதிகமாக, இந்த எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அவர்களால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல், பயணிக்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
