முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜனாதிபதியின் செலவுத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று (30) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரது விளக்கமறியல் காலத்தை மேலும் நீடிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
